First Full Marathon ( 42 கி.மீ ) ஓட்டமும் நானும் 🙂

Unstoppable # ~

First Full Marathon ( 42 கி.மீ ) ஓட்டமும் நானும் 🙂

செல்வா எல்லாம் ஓடுவானா என்ற எண்ணம் இருந்த காலங்கள் மாறி மீண்டும் 42 கி.மீ ஓடுவானா மாட்டானா என்ற எண்ணம் தோன்றி , இறுதியாக எதுவும் முடியும் என்று காட்டிய வாரம் இது என்னுடைய ஓட்டம் ஆரம்பித்தது பீனிக்ஸ் கிளப் மாரத்தான் அன்று தான்.

அந்த நாள் என்னால மத்தவங்க மாரி ஓட முடயலனு ஒரு மன வருத்தம் இருந்தது. ஆன அந்த எண்ணத்த மாத்தி மாரத்தான் ஒரு ரேஸ் கிடையாது தன்னம்பிக்கை ஓட்டம் என்று தேவராஜ் சார் (92 வயது இளம் மாணவன் ) மற்றும் சதீஸ் Sathesh Kumar ( பயில்வான் சிங்கம் ) அண்ணாவும் ஓடி முடித்த கடைசி மணித்துளிகள் என்னோட எண்ணத்தை மாற்றி என்னையும் இவ்வளவு தூரம் ஓட வைத்தது.

எப்படியோ முருகன் புண்ணியத்தில் கடைசியா சதீஸ் அண்ணா மூலமாக பயில்வான் அணியில சேர்ந்தேன். வீக்லி மற்றும் மன்த்லி ஓட்டம் என்று பயிற்சி ஆரம்பமானது.

பயில்வான் அணியில மாஸ்டர்ஸ் ரெண்டு பேரு 42 கி.மீ சென்னை மாரத்தான் முடித்த போது ரமேஷ் அண்ணா சொன்னது, தம்பி ரெண்டு பேரும் 42 கி.மீ இந்த வருசத்துக்குள்ள ஓடனும் ஆன எப்ப என்று தான் தெரியல என்று . நாட்கள் ஓட 42 கி.மீ ஓட்டத்திற்கான நேரம் வந்தது.

எனக்கு ஓட வேண்டாம் என்று ஒரு எண்ணம் இருந்தது, ஆனா ராம்ராஜ், சிவா, ரமேஷ் மற்றும் பாலு அண்ணா இவர்கள் விடாமல் ஊக்கப்படுத்தினார்கள். 21 கி.மீ என்று பதிவு பண்ண கொச்சின் மாரத்தான் 42 கி.மீ தூரம் ஆக மாறியது. பதிவு பண்ண நாளே வலது காலில் உள்காயம். என்ன பண்றதுன்னு தெரியவில்லை.

ரவி சார் Ravishankar Balasubramanian கிட்ட ஓட குருநாதர் ஒரு 15 நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு. அப்ப வந்துச்சு பயம் எப்பிடி 42 கி.மீ ஓடுறது என்று, இந்த இடைவெளியில் தேவராஜ் சார் Utsuv Utsuv குடுத்த அறிவுரைகள் இன்னும் உதவியாக இருந்தது .ஆன 15 நாளுக்கு அப்புறம் உள் காயம் வழி இல்லாம ஓடுன 5 கி.மீ என்னால இன்னும் மறக்க முடியாது. வலி எல்லாம் பஞ்சா பறக்க நம்ம நாலையும் ஓட முடியும்னு ஒரு சந்தோசம் இங்க தா மாஸ்டர்ஸ் ஓட Obey the order you will be success ஞாபகம் வந்தது.

அடுத்து மாஸ்டர் கணேஷ் சார் கிட்ட பயிற்சி ஆரம்பிச்சு, வெற்றிகரமா 21 கி.மீ ஓட்டம் முடிச்சாச்சு. அந்த 21 கி.மீ ஓடி முடித்த அன்று அவ்வளவு ஆனந்தம். அப்பறம் என்ன புறப்பட வேண்டியது தா..

ஒரு வலியா திட்டம் போட்டு ரயில் ஏறி கொச்சின் போயாச்சு. ஆம்லெட் எல்லாம் சாப்பட கூடாதுன்னு முடிவு பண்ணி இடியாப்பம் சாப்பிட்டு விட்டு தூங்க போனோம்.

காலை 1.30 AM ல இருந்து புறப்பட ரெடியாகி நான் ராம்ராஜ், பாலு மற்றும் ரமேஷ் அண்ணா ஆகிய நான்கு பேரும் 42 கி.மீ தொடங்கும் இடத்துக்கு சென்றோம் . அங்க ஒரு சந்தோஷம் கிரிக்கெட் மாஸ்டர் சச்சின நான் என்னோட ரெண்டு கண்ணால பாத்துட்ட, அவரு பேசுனதெல்லாம் படம் புடிச்சாச்சு ஓட ஆரம்பிச்சாச்சு..

ஓட்டம் ஆரம்பித்த முதல் 12 கி.மீ நியூயார்க் ல இருந்து வந்த 71 வயது இளம் நாயகியுடன் ஓட்டம் ஆரம்பித்தது. அடுத்த 13 கி.மீ தொடக்கத்தில் ஸ்கூல் மாணவர்கள்ளோட உற்சாகமான கை தட்டல் இன்னும் வேகமாக ஓட தூண்டியது. அடுத்து 16 கி.மீ யில் இறுந்து 22 கி்.மீ வரை தன்னம்பிக்கையாக ஓடிக் கொண்டிருந்த தோழியுடன் ஒரு ஓட்டம்.

அடுத்து கொஞ்சம் செல்பி, கொஞ்சம் சிற்றூண்டி என்று ஓட்டம் கலை கட்ட தொடங்கியது. 34 கி.மீ வரைக்கும் நல்ல ஓட்டம், குறிப்பிட்ட நேரத்தில் கடந்து விட்டோம் என்ற சந்தோசம். இதற்கு இடையில் குருநாதரின் (சிவா அண்ணா)Sivakumar Eesh Sivakumar ஊக்கமிகு வார்த்தைகள் இன்னும் நன்றாக ஓட முடியும் என்ற எண்ணத்தை தூண்டியது.

அடுத்த 36 கி.மீ நன்றாக தான் போனது, ஆனாலும் இது மைண்ட் கேம் என்று தெறியாமல் மனதை கட்டுப்படுத்த முடியாமல் கால்கள் நடக்க துவங்கியது. நேரம் அதிகமாக மனமும் எதாவது காயம் ஆகிவிடுமோ என்று தொடர்ந்து நடக்க துவங்கி நேரம் அதிகம் ஆனது. கடைசியாக சிவா அண்ணா அழைக்கும் போது எனக்கே இன்னும் முடிக்கவில்லை என்று வறுத்தம். இருந்தாலும் எப்படியாவது 7 மணி நேரத்திற்குல் முடிக்க வேண்டுமென்று ஓடினேன்.

கடைசியாக 41.2 கி.மீ தூரத்தில் இடது காலில் வந்த வலி மயக்கத்தை உண்டாக்கியது. ஆனாலும் கூட ஓடி வந்த நண்பர்கள் உதவியால் காப்பற்றபட்டேன். உற்ற நேரத்தில் உதவும் நண்பர்கள் கிடைப்பது அவ்வளவு அரிது. ஆனால் இந்த ஓட்டம் மனிதனோட எல்லாத்தையும் மாற்றிவிடும் என்னையும் மாற்றியுள்ளது.

ஏனென்றால் எனக்கு அவ்வளவு சொந்தங்கள் சேர்ந்துள்ளது. இதை படித்தால் முட்டாள் என்று நினைக்க தோன்றும் நீங்களும் ஓடிப் பாருங்கள் எல்லாம் புரியத் தோன்றும் . கடைசியாக உயிர் பிழைத்து கூட வந்த நண்பர்கள் வா செல்வா வா என்ற கூப்பிட்ட போது கால்கள் பறக்க ஆரம்பித்தது .

இறுதியாக 42.195 கி.மீ கோட்டை தொட்ட போது குறுஞ்செய்தி வந்தது செல்வா என்னும் நான் 6 மணி 42 நிமிடத்தில் முழு மாரத்தானை நிறைவு செய்துவிட்டேன் என்று, ஓரு வாரத்திற்கு முன்னால் முடிவு செய்தது போல signature pose எடுத்து விட்டு சாப்பாடு தேடி மறுபடியும் ஓட ஆரம்பித்து கடைசியாக ரெண்டு தோசை ஒரு ஆம்பலெட் ஓடு முடித்துக் கொண்டேன்.

இவ்வளவு தூரம் ஓடுவதற்கும் என்னால் ஓட முடியும் என்ற ஊன்று கோலுக்கும் காரணமானவர்களுக்கு நன்றி சொல்வதை விட அவர்களது புகைப்படத்தையும் இந்த பதிவில் இணைப்பதில் மிகவும் சந்தோஷம் !!!

இதுல இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க . என்னோட கல்லூரி நண்பர்கள் இரண்டு பேரும் எப்பவுமே ஊக்கப்படுத்தாம இருந்தது இல்ல அந்த இரண்டு பேரு தா மாரத்தான் போகவே காரணம் !! Vishnuvarthan Rajagopal Boopalan Rs






Comments

Popular posts from this blog

வாங்க சுவையான மட்டன் குழம்பு சமைப்போம் 😊😊😊

Year End Challenge 02/06 - 10 KM Run - 70th 10 KM ...