First Full Marathon ( 42 கி.மீ ) ஓட்டமும் நானும் 🙂
Unstoppable # ~ First Full Marathon ( 42 கி.மீ ) ஓட்டமும் நானும் செல்வா எல்லாம் ஓடுவானா என்ற எண்ணம் இருந்த காலங்கள் மாறி மீண்டும் 42 கி.மீ ஓடுவானா மாட்டானா என்ற எண்ணம் தோன்றி , இறுதியாக எதுவும் முடியும் என்று காட்டிய வாரம் இது என்னுடைய ஓட்டம் ஆரம்பித்தது பீனிக்ஸ் கிளப் மாரத்தான் அன்று தான். அந்த நாள் என்னால மத்தவங்க மாரி ஓட முடயலனு ஒரு மன வருத்தம் இருந்தது. ஆன அந்த எண்ணத்த மாத்தி மாரத்தான் ஒரு ரேஸ் கிடையாது தன்னம்பிக்கை ஓட்டம் என்று தேவராஜ் சார் (92 வயது இளம் மாணவன் ) மற்றும் சதீஸ் Sathesh Kumar ( பயில்வான் சிங்கம் ) அண்ணாவும் ஓடி முடித்த கடைசி மணித்துளிகள் என்னோட எண்ணத்தை மாற்றி என்னையும் இவ்வளவு தூரம் ஓட வைத்தது. எப்படியோ முருகன் புண்ணியத்தில் கடைசியா சதீஸ் அண்ணா மூலமாக பயில்வான் அணியில சேர்ந்தேன். வீக்லி மற்றும் மன்த்லி ஓட்டம் என்று பயிற்சி ஆரம்பமானது. பயில்வான் அணியில மாஸ்டர்ஸ் ரெண்டு பேரு 42 கி.மீ சென்னை மாரத்தான் முடித்த போது ரமேஷ் அண்ணா சொன்னது, தம்பி ரெண்டு பேரும் 42 கி.மீ இந்த வருசத்துக்குள்ள ஓடனும் ஆன எப்ப என்று தான் தெரியல என்று . நாட்கள் ஓட 42 கி.மீ ஓட்டத்திற்கான நேரம்...