கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வரை ஓர் பயணம்.. காலை 5.30 மணிக்கு பேருந்து கும்பகோணம் காய்கறி மண்டியைய் நெருங்கியது,நான் கி.மீ பார்க்க ஆரம்பித்தேன் இன்னும் 5.2 கி.மீ தொலைவில் சுவாமிமலை. பேருந்து நகர நகர தூரம் அதிகரித்தது திடிரென இறங்கி நடக்கலாம் என ஒர் எண்ணமோ ஆசையோ. தயகத்துடன் நடத்துனரிடம் சொல்லி இறங்கும் போது 6.4 கி.மீ தொலைவில் சுவாமிமலை. சரி என நடக்க ஆரம்பித்தேன் 1.3 கி.மீ தூரம் இருக்க என்னுடன் நான்கு கரு நாய்கள், ஏனோ எனக்கு நாய் என்றாலே பயம். 3 அடி சந்து 4 நாய்கள் மனதில் திடிரென ஏதோ ஒரு தைரியம் என்ன நடந்தாலும் இலக்கை அடைய அடிவைத்தேன். நாய்களை தொடர்ந்து 1.8 கி.மீ கடக்கும் போது இரு புறமும் காவிரி ஆற்றுப்படுகை,வழிகள் அழகான போதும் அந்த வழியாக யாருமே வரவில்லை . மீண்டும் திரும்பினேன், வந்த பாதையில் நடக்க ஆரம்பித்து பேருந்து செல்லும் வழியைய் தேடி பிடித்தேன். மீண்டும் 3.8 கி.மீ பார்க்க பார்க்க தீராத அழகு வர்ணங்கள் பூசிய கோவில்களும் வானவில் வண்ண கொண்ட கோலங்களும் நடக்க நடக்க அளவில்லா இன்பம். மனதில் ஆட்கொண்டாது அமைதி .அடுத்து 6.8 கி.மீ தொலைவில் நம்மை போல ஓடும் கால்கள். சிரித்தபடி ஒரு பெரியவரிடம...