கோவை - பெங்களூரு - சென்னை - கோவை பயணமும் நிறைவேறா நிஜங்களும் 🤡🤡🤡
Skechers Chennai Marathon 2020 கோவை - பெங்களூரு - சென்னை - கோவை பயணமும் நிறைவேறா நிஜங்களும் பார்த்தா பெரிய கதையா இருக்கும் , வாங்குன அவ்வளவு அடிக்கு இது ரொம்ப கொஞ்சம் தா 2020 வருடத்தின் முதல் நாள் நடைப்பயணத்தை (1.5 கி.மீ) அக்கா அண்ணா வோடு கோயம்புத்தூரில் ஆரம்பித்தேன் . அடுத்த நாள் ஓட்டம் ஏதோ ஒரு காரணத்திற்காக தடைபட்டது . அது இதற்கு தான் போல , இரண்டாவது ஓட்டத்தை(3.01 கி.மீ) பெங்களூருவில் முடித்துவிட்டு , mysql meetup க்கு சென்றுவிட்டேன் . இது தான் நான் செல்லும் முதல் mysql meetup , நிறைய அனுபவங்களும் அறிவுரைகளும் கிடைத்தது . அத்துடன் எனது MySQL குரு கார்த்தி அண்ணாவோடு ஒரு போட்டோ என பல விதமான ஐடியாவும் நாம் எப்படி இந்த data engineering வில் survive பண்ணுவது என்ற இருக்கமான மனக்குழப்பங்களுடன் பெங்களூருவில் இருந்து கிழம்ப ஆரம்பித்தேன் . என்ன நடக்குமோ அது நடக்கும் என்று இந்த வருடத்தின் மூன்றாவது ஓட்டத்திற்கு (31 கி.மீ) சென்னை கெலம்பியாச்சு . பெங்களூர் to சென்னை பயணத்தில் நன்றாக தூங்க வேண்டும் என்று முடிவு செய்து , ஆனால் அத்தனையும் இந்த நிறைவேறா நிஜங்களினால் ( கனவுகள் ) தூங்காமல் முடிந்துவிட...