கோவை - பெங்களூரு - சென்னை - கோவை பயணமும் நிறைவேறா நிஜங்களும் 🤡🤡🤡
Skechers Chennai Marathon 2020
கோவை - பெங்களூரு - சென்னை - கோவை பயணமும் நிறைவேறா நிஜங்களும்
பார்த்தா பெரிய கதையா இருக்கும் , வாங்குன அவ்வளவு அடிக்கு இது ரொம்ப கொஞ்சம் தா
2020 வருடத்தின் முதல் நாள் நடைப்பயணத்தை (1.5 கி.மீ) அக்கா அண்ணா வோடு கோயம்புத்தூரில் ஆரம்பித்தேன் . அடுத்த நாள் ஓட்டம் ஏதோ ஒரு காரணத்திற்காக தடைபட்டது . அது இதற்கு தான் போல , இரண்டாவது ஓட்டத்தை(3.01 கி.மீ) பெங்களூருவில் முடித்துவிட்டு , mysql meetup க்கு சென்றுவிட்டேன் .
இது தான் நான் செல்லும் முதல் mysql meetup , நிறைய அனுபவங்களும் அறிவுரைகளும் கிடைத்தது . அத்துடன் எனது MySQL குரு கார்த்தி அண்ணாவோடு ஒரு போட்டோ என பல விதமான ஐடியாவும் நாம் எப்படி இந்த data engineering வில் survive பண்ணுவது என்ற இருக்கமான மனக்குழப்பங்களுடன் பெங்களூருவில் இருந்து கிழம்ப ஆரம்பித்தேன் .
என்ன நடக்குமோ அது நடக்கும் என்று இந்த வருடத்தின் மூன்றாவது ஓட்டத்திற்கு (31 கி.மீ) சென்னை கெலம்பியாச்சு .
பெங்களூர் to சென்னை பயணத்தில் நன்றாக தூங்க வேண்டும் என்று முடிவு செய்து , ஆனால் அத்தனையும் இந்த நிறைவேறா நிஜங்களினால் ( கனவுகள் ) தூங்காமல் முடிந்துவிட்டது .
நல்ல தூக்கம் இல்லை , சாப்பிடவும் இல்லை அப்படியே படுத்தாச்சு . அப்போத்தான் அக்கா சொன்னதும் அண்ணா சொன்னதும் நியாபகம் வந்தது , இந்த இடைவிடாப் பயணத்தால் உடம்பு சரியில்லாம போகும் , எல்லோ௫ம் வாழ்க்கைல செட்டுல் ஆகிட்டு ஓடறாங்கனு ஒரு அளவுக்கு தான் ஒடனும் என்று .
அவர்கள் சொல்வதும் சரி தான் . ஆனாலும் ஒரு positive energy,போன வருடம் எவ்வளவோ மாற்றத்தை குடுத்த இந்த ஓட்டம் இந்த வருடமும் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்று 2 AM ல இருந்து 20 miler ஓட்டத்திற்கு தயாராகி starting point போயாச்சு . ஓட்டம் சரியா 4 AM க்கு ஆரம்பிச்சு ,
எல்லாருமே சூப்பரான ஓட்டம் , முதல் 10 கி.மீ 1 மணி 05 நிமிடத்தில் முடிச்சாச்சு . ஆனா இரண்டாவது 10 கி.மீ ல இருந்தே உடம்புல அவ்வளவு tired , சரி எப்படியாவது ஓடி விட வேண்டும் என்று 500 மீட்டர் ஓட்டம் 200 மீட்டர் நடைபயணத்தை எதிர்நீச்சல் பாட்ட கேட்டுட்டும் போட்டோக்கு தாண்டி தாண்டி போஸ் குடுத்தும் 23.5 கி.மீ போயாச்சு .
அங்க வந்தது இந்த கால் வலி அங்க அங்க புடிக்குது , ரோட்லயே நின்னாச்சு பக்கதுல ஒரு பாட்டி கண்ணத்துல கை வச்சு எண்ணவே பாக்குது , எங்க இருந்து வந்த புள்ளையோன்னு . சிரிக்கவும் முடியல அழவும் முடியல ஒரு வழியா ரெடி ஆகி , beach கிட்ட ஒரு போட்டோ ரெண்டு இளநீர் அடிச்சுட்டு ஓட ஆரம்பிச்சு 27.3 கி.மீ வரும் போது இந்த கால் வலி ரோட்ல படுக்க வச்சுருச்சு .
அந்த நேரத்துல என்னோட மாரத்தான் நண்பர் உதவியால கொஞ்சம் கொஞ்சமா கால் வலி சரி ஆச்சு . ஆனாலும் வலி தாங்க முடியாம கத்தும் போது உதவி பண்ண வந்த மெடிக்கல் நண்பர் ஆம்புலென்ஸ்க்கு போன் பண்றனு சொல்லிட்டாரு .
அப்போ நம்ம வரலாறு என்ன ஆகரதுன்னு எப்படியோ கால ரெடி பண்ணி சும்மா கிழி பாட்ட கேட்டுட்டே ரமேஷ் அண்ணா strategy follow pannalannu முடிவு எடுத்து , speed walk பண்ணி பண்ணி 4 மணி 47 நிமிடத்தில finish point ரீச் பண்ணியாச்சு .
கடைசியா வாலினி கிட்ட போனா ஒரு வலி அதிகமாயிருமோனு, நண்பர் Gopi Kannan S streching லாம் பண்ணிவிட்டு ரெண்டு பிலேட் சாப்பாடு வாங்கி குடுத்து safety யா recover பண்ணிடாரு .
4 மணி 30 நிமிடத்தில முடிக்கனும் இருந்த ஓட்டத்த 3 மணி 30 நிமிடத்தில் முடுச்சுருக்கலாம்.ஆனா கடைசியா 4 மணி 47 நிமிடத்திலயாவது முடிச்சது ரொம்ப சந்தோசம் .
ஒன்னு மட்டும் உறுதி எல்லாரு நாளையும் முடியும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்திருச்சு நடக்க ஆரம்பிக்கனும் இல்லனா கடைசி வரைக்கும் படுத்திட்டே இருக்க வேண்டியதா
Comments
Post a Comment