ஆரோக்கியமான வழிகாட்டுதலும் !!!
எந்த ஒரு செயலைத் தொடங்கும் போதும் தயக்கத்தை விட பயம் மற்றும் எதிர்வினை எண்ணங்கள் அதிகமாக இருக்கும் .
அதுபோல தான் 100 நாள் x 2 கி.மீ ஓட்டமும் , ஆரம்பமே பயம் ஒருபுறம் இடைமறித்தாலும் மறுபக்கம் அதிகாலை நேரத்தில் கால்கள் ஓடத் தொடங்கின. பறவைகளின் உற்சாகமாண குரல் மற்றும் பயில்வான்கள் குழுவினரின் ஆரோக்கியமான வழிகாட்டுதலும் எனது சக்கரமாகிய கால்களின் வேகத்தையும் கடந்து செல்லும் பாதையையும் துரிதப்படுத்தியது.
தினமும் வாட்ச்சாப்பிலும் முகநூலிலும் வந்த புகைப்படங்கள் மற்றும் நான் பதிவிடும் போது எனக்கு கிடைத்த பாராட்டுக்கள் ஓடும் நாட்களை இன்னும் மெறுகேற்றியது .
சில தவிர்க்க முடியாத பயணங்கலும் , உடல் உபாதைகளும் ஓடுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தாலும் ஒவ்வொரு தருணத்திலும் ஊக்குவித்த பயில்வான்களின் ஓட்டக் குதிரைகளான சதீஷ்,ராம்ராஜ், சிவா, பாலு ,ரமேஷ் சகோதரர்களின் அன்பாண வார்த்தைகளுக்கும் மற்றும் இளம் குதிரைகளான சரவணன் ஐயா, ஜவகர் க்கும் கடல் கடந்த நன்றிகள் .
இந்த 100 நாட்கள் ஒட்டத்தில் சதீஷ் அண்ணாவின் 500 கி.மீ / 31 நாள் ஆரவாரம் , ராம்ராஜ் அண்ணாவின் 15 முறைக்கு மேலான 21 கி.மீ மற்றும் 1401 கி.மீ / 100 நாள் , சிவா அண்ணாவின் இரண்டு 50 கி.மீ அல்ட்ரா ஓட்டங்கள் மற்றும் பாலு அண்ணாவின் 1000 கி.மீ சாதனைகள் ஓடுவதற்கும் ஓட்டத்தை நிறுத்த கூடாது என்ற ஒரு ஆர்வத்தையும் தூண்டியது .
Comments
Post a Comment