சாலையோர சைகைகளும் , அதற்கான காரணங்களும்
எப்பவுமே அறக்க பறக்க இருக்கற காலை நேரம் , அடிச்சு புடிச்சு கெளம்பினாலும் Roommates சமைக்கற அற்புதமான சமையல சாப்பிட 15 நிமிடம் கண்டிப்பா வேணும் .
இன்னைக்கும் முன்னாடி சொன்ன எல்லாம் முடுச்சுட்டு நம்ம புல்லட்ட வேகமா விரட்டிட்டு Bethal city cathedral church வழியா போனா , ரோடு blocked . எப்பா என்ன புதுசா இருக்குன்னு திரும்ப GP signal போகும் போது , திடீரென்று ஒரு சந்துகுள்ள இருந்து தம்பி town bus stand ல மட்டும் இறக்கி விட்றுனு ஒரு குரல்.
நம்ம ராமகிருஷ்ணா ரூட் ஆச்சே என்ன பண்றதுன்னு அவரு முகத்த பாத்தா ரொம்ப tired அப்பறம் ரொம்ப தூரத்துல இருந்து நடந்து வந்த மாறி இருந்துச்சு . சரி ஏறுங்கன்னு ஏத்துனா ,
அவரு இருக்கற ஒடம்புக்க ஒன் சைட வேர உக்காந்துட்டாரு . நம்ம புல்லட்டு வேர தடுமாறுது , சரியா gp signal ல 5 நிமிசம் சிக்னல் லேட் நான் கடிகாரம் பாக்க அவரு என்ன பாக்க கடைசியா தம்பி நேரம் ஆச்சான்னு கேட்டுட்டாரு இல்லங்கனு சொல்லி புல்லட்ட பஸ் stand ரோடு ல பறக்க விட்ட .
சரி எப்படியோ 15 நிமிடத்துல 500 மீட்டர் ரீச் பண்ணியாச்சு . அவருக்கும் எதோ அவசரம் வண்டிய விட்டு தாண்டிருவாரு போல , பஸ் stand முக்குல எறக்கி விட்டுட்டு பைக்க முறுக்கும் போது அவரு மனசார "Have a successful day thambi" னு சொல்லி அனுப்புனாரு .
எத்தனையோ பேருக்கு உதவி பண்ணுனது உண்டு ஆனா யாரும் இப்படி சொன்னது இல்ல , எனக்கு அவரு நல்ல படிச்சவரு போலனு நெனச்சுட்டு , ஆபிஸ் போயாச்சு .
ஆனா இன்னைக்கு அத்தனையும் opposite , ரொம்ப நாளா தள்ளி போட்ட வேலையெல்லாம் அவ்வளவு speed ah நடக்குது . ஒரு satisfied comeback to home on today . Really happy something we done today .
Comments
Post a Comment