அன்புத் தம்பிக்கு வாழ்த்துரை !!!

அன்புத் தம்பிக்கு வாழ்த்துரை !!!

நீ சாதித்து விட்டாய் டா

முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை

100 km ஓட்டத்திற்கு பதிவு செய்ய உன்னை நான் அழைத்தபோது தயங்கிக்கொண்டே வேண்டாம் என்றாய்

தைரியமாக எதிர்கொள்ளலாம் வாடா என்றேன்.. 42 km க்கே நாக்கு தள்ளிவிடும் என்றாய்... நான் கூறினேன் உன்னிடம் 100 கிலோமீட்டர் தொலைவை கடந்து செல்லா விட்டாலும் புதிய உச்சத்தை நீ தொடு

முடிந்ததை உன் வரலாற்றில் நீ பதிவு செய் என்ற நம்பிக்கை வார்த்தைகள் நான் கூற முயற்சி செய்கிறேன் என்று கூறி பதிவு செய்து விதை விதைத்தாய் அன்று

முடியாது என்பது முட்டாள்தனம்

முடியும் என்பது மூலதனம்

நீ விதைத்த விதைக்கு நம்பிக்கை என்னும் தண்ணீரை நாங்கள் ஊற்ற ...பயிற்சியின் போது 50 km தொலைவை நீ கடந்து ! அந்த விதை செடியாக வளர்ந்தது

கடந்த ஞாயிற்றுக்கிழமை நீ ஓடிய ஓட்டத்தின் மூலம் அந்தச் செடி ஆலமரமாக வளர்ந்து , 85 கிலோமீட்டர் ஓடி சாதித்து விட்டாய் அன்பு சகோதரா...
நாங்கள் ஓடியது எங்களுக்கு பெருமை அல்ல

உன்னை ஓட வைத்து அழகு பார்த்தது தான் எங்களுக்கு பெருமை... சாதித்து விட்டாய் டா செல்வகுமரா

உன்னைப்போன்ற சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்த நல்லுள்ளம் படைத்த நல்லோர்கள் பலர் உள்ளனர்

அன்பும் வாழ்த்தும் உனக்கு அடுத்த பயணத்தை வெற்றியுடன் நீ நடத்து நாங்கள் இருக்கிறோம் உன்னை அழைத்துச் செல்ல அன்புடன் ராமராஜ்.K



Comments

Popular posts from this blog

வாங்க சுவையான மட்டன் குழம்பு சமைப்போம் 😊😊😊

Year End Challenge 02/06 - 10 KM Run - 70th 10 KM ...